சீனப் பிரதமர் ஸி ஜின் பிங் (Xi Jinping), திறந்த சமூகங்களுக்கு (Open society) மிகப்பெரிய அச்சுறுத்தல் என தாராளவாத, கோடீஸ்வர நிதியாளர் ஜோர்ஜ் சோரோஸ்(George Soros) குறிப்பிட்டார்.
திங்களன்று இம் மாற்றத்திற்கான அழைப்பை விடுத்த அவர், சீனாவில் ஆரம்பமாகவிருக்கும் 2022 பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை, 1936ல் நாசி ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுடன் ஒப்பிட்டுப் பேசினார்.
பழமைவாத ஹூவர் நிறுவனத்தில்(Hoover Institution) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் ஆற்றிய உரையில், சொரெஸ் சீனாவை “உலகின் மிகவும் சக்திவாய்ந்த சர்வாதிகார அரசு” என்றும் “இன்று (மூடப்படாத) திறந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் அது ” என்றும் கூறினார்.
1963ம் ஆண்டின் நாசி ஜெர்மனியைப் போன்று, தற்போது நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் பிரமாண்டத்தை , தனது கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த சமூக அமைப்பின் பிரச்சார வெற்றியைப் பெற பீஜிங் பயன்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
கட்டுப்பாடற்ற சந்தைப் பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய முன்னாள் சீனத் தலைவர் டெங் சியாவோபிங் (Deng Xiaoping) கைப் போலல்லாது, பொதுவுடைமைக் கொள்கையின் உண்மையான நம்பிக்கையாளர்” என ஜின் பிங்கை அவர் குறிப்பிட்டார். மேலும் “மாவோ சேதுங் மற்றும் விளாடிமிர் லெனின் சிலைகளை அவர் தனது முன்மாதிரிகளாக கொள்கிறார் ” எனக் கூறினார்.
பல அமெரிக்க பழமைவாதிகளின் நீண்டகால விருப்பமான “சீனாவில் ஆட்சி மாற்றப்பட வேண்டும்” என்கின்ற அழைப்போடு, சொரெஸ் தனது உரையை நிறைவு செய்தார். அவர்கள்(பழமைவாதிகள்) எல்லோரும் ஜின் பிங்கின் தலைமையை கடுமையான எதிர்ப்புணர்வுடன் நோக்குகின்றனர். இன்று (மூடப்படாத ) திறந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலை இது (ஆட்சி மாற்றம்) அகற்றும். அத்துடன் அவர்கள் விரும்பிய திசையில் செல்ல சீனாவை ஊக்குவிக்க, அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என கோடீஸ்வரரான ஜோர்ஜ் சோரோஸ் வேண்டுகோள் விடுத்தார்.
ஜோர்ஜ் சோரோஸ் ஓபன் சொசைற்றி (Open Society Foundation) அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார். பிளக் லைவ்ஸ் மற்றர்(Black Lives Matter), பிளான்ற் பேரன்ஹூட் (Planned Parenthood) மற்றும் குடியேற்ற சீர்திருத்தங்கள்(Immigration reforms) போன்று, அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தாராளவாத மற்றும் இடதுசாரி சிந்தனைகளை ஆதரிக்கிறது.