அமெரிக்காவுடனான மோதல் என்று வந்துவிட்டால், சீனா அஞ்சாது

அமெரிக்காவுடனான மோதலுக்கு சீனா அஞ்சாது, ஆனால் இரு தரப்பிற்கும் நன்மையளிக்கும் ஒத்துழைப்பை வரவேற்கும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

சீன வெளியுறவுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில் வாங் யி கூறியதாவது, அமெரிக்க தரப்பின் தவறான முடிவுகள் காரணமாக இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளன. மோதல் என்று வந்துவிட்டால், சீனா அஞ்சாது, இறுதிவரை சண்டையிடும். போட்டி போடுவதில் எந்தவித பாதிப்பும் இல்லை, ஆனால் அது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். கொரோனா தோற்றும், வர்த்தகம், மனித உரிமைகள் மற்றும் தைவான் மீது சீன அழுத்தத்தை அதிகரிப்பது போன்ற விவகாரங்களில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளால் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் இருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்க செனட் வியாழக்கிழமை நிறைவேற்றியது. ஜின்ஜியாங் பிராந்தியத்தில் மக்கள் கட்டாயப்படுத்தி பணி அமர்த்தப்படுவதால் தடை விதிப்பதாக அமெரிக்க அறிவித்துள்ளது. ஆனால், ஜின்ஜியாங்கில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்தள்ளது.

Spread the love