இன்றைய சபை அமர்வில் நிதி இராஜாங்க மைச்சர் ரஞ்சித் சியாமளப்பிட்டிய கருத்து தெரிவிக்கையில் நாம் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளோம். இதற்காகவே கடந்த 20 ஆம் திகதி முதல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டோம். அரச உதவிகளை எதிர் பார்த்திருப்பவர்கள் விண்ணப்பியுங்கள் என்று.
57 இலட்சத்து 8 ஆயிரம் பேர் உதவி வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். அதிலும் தென் மாகாணத்தில் 7 இலட்சத்து 7 ஆயிரம் நிவாரணம் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர். அதிலும் 34 இலட்சம் பேர் வாழ்வதற்கு உதவிகளை கோரியுள்ளனர். ஆகவே ஜனவரி மாதம் முதல் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் இவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் என்றார்.