பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகின்ற 11 கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (13) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தினர்.
இதனிடையே, அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணையில் தற்போது கையொப்பமிடப்பட்டு வருகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் அவரது கட்சி உறுப்பினர்களுடன் நேற்று அதில் கையொப்பமிட்டார். இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று கைச்சாத்திட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று அதில் கையொப்பமிட்டனர்.