ஜெனீவாவில் அரசையும் நாட்டையும் கைவிடோம் – சஜித்

ஜெனீவாவில் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம் என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்த போதே இந்த அறிவிப்பை விடுத்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கூறுகையில், இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் பாரிய பிரச்சினைகள் உள்ளன.

இவ்வாறான நிலையில் நாடு தற்போதும் மிகப்பெரும் அபாய நிலைக்கு கொண்டு செல்லப்படுகின்றது. செப்டம்பர் மாதம் ஜெனீவாவில் இலங்கைக்கு பாரிய நெருக்கடிகள் காத்திருக்கின்றன. ஜெனீவா நெருக்கடிகளைப் பொறுத்தவரையில் நாம் அரசுக்கும் நாட்டுக்கும் சார்பாகவே செயற்படுவோம். நாம் மற்றவர்களைப்போன்று ஜெனீவாவுக்கு செல்லமாட்டோம். எமது நாட்டைப்பற்றி ஒரு போதும் வெளிநாடுகளுக்கு புறம் சொல்லவோ முறையிடவோமாட்டோம். நாட்டுக்காகவே செயற்படுவோம் என்றார்.

 

Spread the love