கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள இரண்டு எரிபொருள் கப்பல்கள் டொலர் இன்மையினால் கடந்த மூன்று நாட்களாக துறைமுகத்திலேயே நங்கூரமிட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அரசாங்கம் உடனடி ஒழுங்குமுறையின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்த போதிலும், டொலர் நெருக்கடியின் காரணமாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. இரண்டு கப்பல்களையும் தொடர்ந்தும் இவ்வாறு நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டால் எரிபொருளுக்கான நிறுத்தக் கட்டணத்தையும் அரசாங்கம் செலுத்த வேண்டும்.
டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களே இவ்வாறு நங்கூரமிடப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தேவையான பெற்றோலும் , 7 நாட்களுக்கு தேவையான டீசலும் மாத்திரமே காணப்படுவதாக எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் மூலம் அறியக்கிடைத்துள்ளது. இவ்வாறான நிலைமையின் கீழ் எதிர்வரும் நாட்களில் தீவிரமான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்றும் ஐ.தே.க. பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.