தங்காலை பொலிஸ் கான்ஸ்டபிள் சதுரங்க தில்ஶான் (வயது 36) கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒரு பெண்ணும் அடங்குகிறார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் மற்றும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது அவர் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலில் கான்ஸ்டபிள் உயிரிழந்துள்ளதுடன் அவரது இளைய சகோதரரும் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.