திராய்க்கேணி தமிழ்க் கிராமத்தின் பாரம்பரிய சலவைத் தொழிலமுறைக்கான ஆதாரமான நீர் நிறைந்த கேணியை எவ்வித அனுமதியும் இல்லாமல், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அத்துமீறி மூடிவருவதாக பொதுநலஅமைப்புகள் பரவலாக முறையிட்ட வண்ணமுள்ளன..
அம்பாறை மாவட்டத்தில், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்டது ஒரேயொரு தமிழ்க் கிராமம் திராய்க்கேணிக் கிராமமாகும்.
இக்கிராம மக்களில் பலர் சலவைத் தொழிலில் ஈடுபடுபவர்கள். பரம்பரை பரம்பரையாக இக்கேணியில் தமது சலவைத்தொழிலைச் செய்துவருகின்ற இந்நிலையில், அப்பகுதி தவிசாளர் திடீரென இவ்விதம் அராஜமாகச் செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது அவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது அகவே அவர்கள் அதுபற்றி முறைப்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பகுதியாக இந்நடவடிக்கைக்கு, திராய்க்கேணி பொதுநலஅமைப்புகள் பல இணைந்து தவிசாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமது எதிர்ப்பைத் தெரிவித்தது வருகின்றனர்.
அதில் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பரிபாலன சபையினர், இவ் அத்துமீறி மண்நிரப்பும் செயற்பாடு குறித்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தொடக்கம் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் வரை எழுத்துமூலம் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
குறித்த சபைத் தலைவர் சி.கார்த்திகேசு மற்றும் செயலாளர் கி.புவனேஸ்வரன் இணைந்து கையெழுத்து வைத்து முறையிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “திராய்க்கேணி பாலமுனை 06ஆம் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீ பெரியதம்பிரான் கோவில் பரிபாலன சபையினரின் கீழ் இக்குளம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பல்லது சலவைத் தொழிலாளிகளிடமோ எவ்வித அனுமதியுமின்றியோ அல்லது எந்தவித விண்ணப்பமும் இன்றியோ எமது நிலத்திலுள்ள குளத்தைதவிசாளர் எ.எல்.அமானுல்லா கனரக வாகனங்களின் உதவியுடன் மண்போட்டு மூடி வருகின்றார். இவ்விதம் தன்னிச்சையாக முடிவெடுத்து செயற்படும்.
“அவரது இவ் அராஜகச் செயலை உடனடியாக தடுத்துநிறுத்துமாறும் , எமது பாரம்பரிய சலவைத் தொழிலை தொடர்ந்து செய்வதற்கும், சலவைத்தொழிலாளரும் அநீதி இழைக்காமல் அவர்கள் வாழ்வாதாரத்தைத்த திறம்பட செய்து கொண்டு போக ஆவன செய்யுமாறு வேண்டுகிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.