தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு எனும் பெயரில் புதிய அமைச்சு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அமைச்சின் கீழ் ஆட்பதிவு திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை டெலிகொம் நிறுவனம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு – இணை நிறுவனங்கள், இலங்கை முதலீட்டு சபை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், இலங்கை தரவளவு நிறுவனம், லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.