தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் இன்று மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்று முதல் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் தொழில் திணைக்களத்தின் பிரதான அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டிருக்குமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இதன் காரணமாக தொழில் திணைக்களத்தின் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் செயற்பாடுகளில் எந்தவித இடையூறுகளோ அல்லது தாமதமோ ஏற்படாது என அமைச்சு உறுதியளித்துள்ளது. அத்துடன், வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் பணிக்கு சமூகமளிக்காவிட்டாலும் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என சுற்றறிக்கையினூடாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.