சட்டவிரோத வெளிநாட்டு முதலீடு தொடர்பான விவகாரத்தில், நடிகை ஐஸ்வர்யா ராய் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2016-ல் “பனாமா பேப்பர்ஸ்” வெளியிட்ட ஆவணங்களில், இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர்கள், அரசியல், சினிமா மற்றும் விளையாட்டுத்துறை பிரபலங்கள் 500-க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக கூறப்பட்டது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக அமலாக்கத்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் டெல்லி அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு, நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு இருமுறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் இதுவரை நேரில் ஆஜராகவில்லை.