முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்பி வருவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க, அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின்போது விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி தொடர்பு கொண்டுள்ளார், கோட்டாபயராஜபக்ச நாடு திரும்புவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறு பசில் ராஜபக்ச, ஜனாதிபதியிடம் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகிய போதிலும் அவர் அதனை இதுவரை உறுதிப்படுத்தவில்லை . இதனால், கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்பும் தினம் இன்னும் உறுதியாகவில்லை .