நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் தலையிட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை

தேசிய பாதுகாப்பு விடயங்களில் தலையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு உரிமையில்லை என அரசியலமைப்பின் உயர்மட்ட சட்டத்தரணி மனோகர டி சில்வா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாது ஒழிப்பதற்கான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அழைப்பு குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மனித உரிமைகளுக்கான ஐ.நா. பிரகடனம் உட்பட மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கைக்கு எதிராக ஏதேனும் சரத்துக்கள் இருந்தால் மட்டுமே அவர்கள் சுட்டிக்காட்ட முடியும். சட்டம் இயற்றுவது இலங்கை மக்களின் உரிமை என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை இயற்றுவதற்கு தமக்கு உரிமை உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களுக்கே இந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார். 

Spread the love