நாட்டில் வைத்தியர் பற்றாக்குறை – வெளிநாட்டிலிருந்து வரவழைக்கும் நிலை

வைத்தியர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை அழைத்து வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசு விதித்துள்ள கடுமையான வரிக் கொள்கைகளும், நாட்டில் நிலவும் ஸ்திரமற்ற நிலையுமே முக்கியக் காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love