36,500 மெட்ரிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்று நேற்றிரவு(30) நாட்டை வந்தடைந்தது. கப்பலிலிருந்து பெட்ரோலை இறக்கும் பணிகள் இன்று(31) ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெட்ரோலை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுத்திகரிப்பு நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
நாளாந்தம் 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் பெட்ரோலை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.