நிதி உத்தரவாதங்களை வழங்க பாரிஸ் கழக கடன் வழங்குநர்கள் இணக்கம்!

இலங்கைக்கு, சர்வதேச நாணய நிதியத்தின், நிதியுதவி ஒப்புதலை பெறுவதற்கான, நிதி உத்தரவாதங்களை வழங்க பாரிஸ் கழக கடன் வழங்குநர்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த செய்தியை ரோய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

இதன்படி ஹங்கேரி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா ஆகிய இருதரப்பு கடன் வழங்குநர்களுடனும், ஏனைய முக்கிய பங்குதாரர்களுடன் மறுசீரமைப்புக்காக இணைந்து செயற்படவுள்ளதாக பாரிஸ் கழகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்தியா, இலங்கைக்கு வழங்கிய கடனை 10 வருடத்துக்கு காலதாமதப்படுத்தவும், 15 வருடங்களுக்கு மறுசீரமைக்கவும் இணங்கியுள்ளது.எனினும் சீனா இரண்டு வருட கால தாமதத்துக்கு மாத்திரமே இணங்கியுள்ளது. இந்தநிலையில் சீனாவின் நிலைப்பாடே தற்போது, இலங்கைக்கான சர்வதேச நாணய நிதி வழங்கலுக்கு தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love