காற்று இல்லாத சக்கரங்கள் உருவாக்கி வருகிறது மிச்செலின்(Michelin) நிறுவனம். இந்த வகை சக்கரங்கள் வாகன பராமரிப்பிற்கான செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் உதவும் என கூறப்படும் இவ்வகை சக்கரங்களை உருவாக்கி வருவதாக மிச்செலின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த தலைமுறை செவோலெ வோல்ட் (Chevrolet Volt) மின்சார வாகனங்களுக்காக இந்த அமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த வகை சக்கரங்களுக்கு ’மிச்செலின் அப்ரிஸ் (MICHELIN Uptis) என அந்நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த வகை சங்கரங்கள் அடுத்த 3 முதல் 5 வருடங்களில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செவோலெ நிறுவனம் புதிய தலைமுறைக்கான செவி வோல்ட் மின்சார காரை உருவாக்கி வருகிறது. இந்த வகை வகையைச் சேர்ந்த வாகனங்கள் 2025-ல் வெளியாகும் என எதிர்வு கூறப்படுகிறது. இந்த வகை வாகனங்கள் முழுவதும் காற்று அடைக்கப்படாத சக்கரத்தைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டே இந்த வகை சக்கரத்தைக் உருவாக்கி தற்போது இதன் மேம்படுத்தப்பட்ட வடிவத்தை/வகையை உருவாக்குவதற்காக 50 காப்புரிமைகளை மிச்செலின் நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த வகை சக்கரங்கள் செலவீனங்களை குறைக்கவும், பொருட்கள் வீணாவதை தடுக்கவும் உதவும் என கூறப்பட்டுள்ளது.