பருத்தித்தீவு கடல் அட்டைப் பண்ணைக்கு எதிராக முறைப்பாடு-மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவு

பருத்தித்தீவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடல் அட்டைப் பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் மீனவர்கள் சார்பில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது.

எமது பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் அனுமதியின்றி பருத்தித்தீவில் அட்டைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. நெக்டா நிறுவனம் அட்டைப் பண்ணைகளை வழங்குவதற்கு பொறுப்பாக இருக்கின்ற நிறுவனமாக இருக்கும் நிலையில் ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்தின் அனுமதி இன்றி குறித்த அட்டைப்பண்ணை செயல்படுவதாக தகவல்அறியும் சட்டமூலத்தில் அறிந்துள்ளோம்.
ஆகவே எமது கடல் வளத்தை பாதுகாப்பதற்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் சட்ட நீதியற்ற அட்டை பண்ணைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Spread the love