பாராளுமன்ற சாப்பாட்டு கணக்கு

கடந்த 2020 ஆண்டில் மாத்திரம் உணவுக்கு 9 கோடி ரூபா செலவு செய்யப்பட்டதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்றத்துக்கு வரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்குவதற்காக 2020 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பல்வேறு ஊழல்கள் மற்றும் வீண்விரயங்கள் காரணமாக பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் இழக்கப்படுவதை தடுக்கும் வகையில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அண்மைக்காலமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய அரிசி, மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love