பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் முதலாவது பனிப்போர் தற்போது ஆரம்பித்துள்ளது. ஒரு நாளை வீணடிப்பதைத் தவிர்க்க, ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை பிரதி சபாநாயகராக ஏகமனதாக நியமிக்குமாறு ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
இருப்பினும் ஆண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை குறித்த பதவிக்காக பொதுஜன பெரமுன மும்மொழிந்துள்ள நிலையில் தற்போது இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றுவருகின்றது.
இதேவேளை நாடாளுமன்றில் இன்று பலரும் வாக்கெடுப்பை நடாத்தாமல் கட்சித் தலைவர்கள் கூடி ஏகமனதாக ஒருவரை தெரிவு செய்யவேண்டும் என கோரியிருந்தனர். இருப்பினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இடம்பெற்ற காரசாரமான விவாதத்தில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காமல் மௌனம் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.