பிரபலங்களின் மரணம் என்றாலே அது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி தான். அப்படி இந்த கொரோனா காலகட்டத்தில் பலரது இறப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போதும் அப்படி ஒரு தகவல் தான் வந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய சங்கீதா சுஜித் திருவனந்தபுரத்தில் காலமானார். 46 வயதான அவர் சிறுநீரக தொடர்பான பிரச்சனையால் சிகிச்சை பெற்றுவந்த அவர் தனது சகோதரியின் வீட்டில் இறந்துள்ளார். சங்கீதாவின் இறுதிச் சடங்கு இன்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெற இருப்பதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.