பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற இம்மானுவேல் மக்ரோன் இரண்டாவது முறையாக அந்நாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ளதை அடுத்து பிரான்ஸ் அரசில் மாற்றங்களை கொண்டு வர அவர் முடிவு செய்தார்.
இதன் அடிப்படையில் பிரான்ஸ் பிரதமர் ஜீன் கெஸ்ட்க்ஸ் நேற்று முன்தினம் தனது பதவியை இராஜினாமா செய்தார். இதையடுத்து முந்தைய அரசில் தொழிலாளர் அமைச்சராக பதவி வகித்து வந்த எலிசபெத் போர்னி பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெளியிட்டுள்ளார். 61 வயதான போர்ன் பிரான்ஸ் வரலாற்றில் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்ட இரண்டாவது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.