போர்க்காலத்தில் இறந்தவர்களின் நினைவேந்தல் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமரின் நிலைப்பாடு

போர்க்காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அவர்களை அமைதியாக நினைவேந்த முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் நினைவேந்தல் நிகழ்வுகள் வரும்போது இன ரீதியான, மொழி ரீதியான, மத ரீதியான கருத்து மோதல்கள் வெடிக்கின்றன. அந்த நிலைமை இனியும் தொடரக்கூடாது என்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியாகவுள்ளார்.

நினைவேந்தல்களை இறந்தவர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் சார்ந்த இனத்தவர்கள் அமைதியாகக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் அரசியல் நிகழ்ச்சி நிரல் உள்ளதாகவோ அல்லது இன ரீதியான கிளர்ச்சியைத் தூண்டுபவையாகவோ இருக்கக்கூடாது.

அதேவேளை, தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் கொடிகளைப் பயன்படுத்தியோ அல்லது அந்த அமைப்புக்களுக்கு புகழாரம் சூட்டியோ நினைவேந்தல் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க முடியாது. அவற்றை மீறினால் சட்டங்களுக்கமைவாகவே நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தெரிவித்துள்ளார். 

Spread the love