அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி வௌியிடப்பட்ட சுற்றறிக்கை, மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னேவின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவைக்கு சமூகமளிக்கும்போது அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்டு வௌியிடப்படும் சுற்றறிக்கையை தவறான முறையில் பயன்படுத்தி அவர்கள் சேவைக்கு சமூகமளிக்காமல் இருக்கும் நிலை ஏற்படாத வண்ணம் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Online முறைமை ஊடாக முன்னெடுக்கப்பட முடியாத அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான ஊழியர்களை, சேவைக்கு அழைப்பதில் இதனூடாக இடையூறு ஏற்படாதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.