மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்தார்.
அதனடிப்படையில் நாளை (10) முதல் 75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 30 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 198 ரூபாய் அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், 60 அலகுகள் வரை பயன்படுத்தும் மின்சார பாவனையாளர்களின் மின் கட்டணத்தில் 200 ரூபா அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 90 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 276 ரூபா அதிகரிப்பை மின்சார சபை கோரியிருந்த போதிலும், 125 ரூபாவான சிறிய தொகைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பான பிரேரணையை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று (08) அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதுடன் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதன்படி, குடிநீர் கட்டணத்தில் திருத்தம் செய்வது குறித்து எதிர்காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது. எவ்வாறாயினும், கடந்த 10 வருடங்களாக நீர் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.