சமையல் எரிவாயு 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலையை 850 ரூபாவினால் அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, லிட்ரோ எரிவாயு நிறுவனம் நேற்றுமுன்தினம் 12ம்திகதி பல பகுதிகளுக்கும் எரிவாயு சிலிண்டர்களை வெளியிட்டது. இருப்பினும், சில பகுதிகளில், எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள வந்த வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆனாலும் நேற்றும், அதற்கு முந்தைய நாளும் சுமார் 200,000 எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு வெளியிட்டதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.