மே 9 வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் வலியறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பாக அமையப்பெற்ற 7 நாடுகளின் குழு இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.
ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது மாநாட்டில் இந்த குழுவின் சார்பாக அறிக்கை ஒன்றை வாசித்த பிரித்தானியாவின் பிரதிநிதி ரிட்டா ஃப்ரென்ச், இலங்கை அண்மைக் காலமாக முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை அறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் நீண்டகாலமாக இலங்கையில் நிலவுகின்ற தண்டனைகளில் இருந்து தப்புகின்ற நிலைமை மற்றும் ஊழல்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.