யாழில் பாகிஸ்தான் தூதுவர் மாநகர முதல்வரை சந்தித்தார்

யாழ்ப்பாணம் வந்துள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக்புர்கி யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். மாநகர சபைக்கு சென்ற பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முதல்வர் மணிவண்ணனை சந்தித்துப் பேசினார். இதன்போது யாழ் மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலனும் உடனிருந்தார். உயர்ஸ்தானிகரின் விஜயத்தின்போது யாழ். மாநகர சபை அலுவலக சூழலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Spread the love