ருவிற்றரை தன்வசப்படுத்திய எலான் மஸ்க் அடுத்து கொக்கோ கோலா, மெக் டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்கப் போவதாக ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.
ருவிற்றர் நிறுவனத்தை கைவசப்படுத்திய எலான் மஸ்க் தற்போது அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான ருவிற்றரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா ஆகியவற்றின் நிறுவுநருமான எலான் மஸ்க் ருவிற்றர் நிறுவனத்தின் 100 வீத பங்குகளையும் 44 பில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் ருவிற்றர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் ருவிற்றரில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் சமூக வலைத்தளத்தை மகிழ்ச்சியாகவே அதிகம் பயன்படுத்துவோம். அத்துடன் கொக்கோ கோலா, மெக்டொனால்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை வாங்கப் போகிறேன் என ருவிற்றரில் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்து ருவிற்றரில் கருத்துக்களை தெரிவிக்கும் எலான் மஸ்க் உலக அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.