வடகொரியா கடந்த 5 ஆண்டுகளின் பின்னர் ஏவப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த மற்றும் நீண்டதூரம் பயணிக்ககூடிய ஏவுகணைகளை ஏவிய போது விண்ணில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட அசாதாரண படங்கள், கொரிய தீபகற்பத்தின் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைக் காட்டுகின்றன. பியாங்யாங்கில் திங்களன்று Hwasong-12 என்ற இடைநிலை ஏவுகணை சோதித்ததை உறுதிப்படுத்தியது. வடகொரியாவின் இந்த சமீபத்திய சோதனை சர்வதேச சமூகம் மத்தியில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. பியாங்யாங் கடந்த மாதத்தில் மட்டும் ஏழு ஏவுகணைகளை ஏவி பரிசோதித்ததுடன், அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் கடுமையான கண்டனங்களையும் எதிர் கொண்டமை குறிப்பிடத்தக்கது.