அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்குத் தொடர்ந்தும் அமைச்சரவை அமைச்சர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக்குச் சமமான பாதுகாப்பை வழங்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் மற்றும் கம்மன்பில ஆகியோர் அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.