உலகளவில் 20 நாடுகளைச்சேர்ந்த 200 பேருக்கு குரங்கம்மை நோய் உறுதியாகியுள்ளதாகவும் 100 பேருக்கு தொற்றுக்கான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மே மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை நோய் பரவியிருந்த நிலையில் பிற நாடுகளுக்கும் இந்நோய் பரவிவருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது என்றும் தெரிவித்துள்ளது.