பாடசாலை ஆசிரியைகள் சிலர், புடவைக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு சமுகமளித்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியின் கண்ணியத்தை பாதுகாக்கும் வகையில், பாடசாலைக்கு வருகை தரும்போது, ஆசிரியர்கள் பாரம்பரியமாக பின்பற்றும் நடைமுறைகளை குறித்த ஆசிரியைகள் ஏன் கடைப்பிடிக்க தவறினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக அறிக்கையை வழங்குமாறு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர் பணியின் கண்ணியத்தை காக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில் ஆசிரியர்கள் தாம் விரும்பிய ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தர முடியாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.