இளைஞர் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கிக்கின் விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24/01) உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்கின் சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான அறிவித்தலை விடுக்கும்படி மேல்நீதிமன்ற நீதிபதி அமல் ரனராஜா உத்தரவிட்டுள்ளார்.