அச்சுறுத்தலின்றி விருப்பத்திற்கு அமைவாக வாழ்வதற்கு, வாழ்வாதாரத்தை ஏற்படுத்த சகல பிரஜைகளுக்கும் உரிமை உண்டு

இனம் மதம் பேதம் மற்றும் ஆண், பெண் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் அச்சுறுத்தல் பீதியின்றி தமது விருப்பத்திற்கு அமைவான இடத்தில் வாழ்வதற்கும் ,வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொள்வதற்கும் சகல பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு மொஹான் சமரநாயக்க மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Spread the love