மூன்றாவதாக 6 பிரிவின் கீழ் பதியப்பட்ட 5 கோடி மதிப்பிலான நிலமோசடி வழக்கில் மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மார்ச் 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜாமீன் கேட்டு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவர் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 25 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களையும் தீரக்கேட்ட நீதிபதி அல்லி, புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், காவல் துறையின் ஆட்சேபத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
அதேநாளில் 5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் மீண்டும் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், அவரது மகள் மற்றும் மருமகன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இவ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதன்பிரகாரம் இந்தியன் பீனல் கோர்ட் 120(பி)- கூட்டுசதி,447-அத்துமீறி நுழைதல், 326- பயங்கர ஆயுதங்களை கொண்டு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துதல், 397- பயங்கர ஆயுதங்களால் கொள்ளையில் ஈடுபடுதல், 506(2)-கொலை மிரட்டல், 109- குற்றம் செய்ய தூண்டுதல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் மத்தியகுற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இது குடும்ப சொத்து தொடர்பான வழக்குஎன்றும், இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் உள்ளது என்றும் திமுக அரசு தன்மீது வேண்டுமென்று பழிவாங்கவே போடப்பட்ட வழக்கு இது என்றும் அத்துடன் இவ்வழக்கானது அண்ணன் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப் பிரச்சினையாகும் இதில் எந்த விதத்தில் என்னை ஈடுபடுத்த முடியும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சிவில் வழக்கு இதில் எப்படி நில அபகரிப்பு வரும்,
இந்த வழக்கு முழுவதும் அண்ணன் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு சொத்துப்பங்கீடு சம்பந்தமானது இதில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எந்த விதத்தொடர்பும் இல்லை எனவே இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர் தம் பக்க வாதத்தை எடுத்துரைத்தார்.
முன்னாள் அமைச்சராகவும் அத்துடன் முன்னாள் சபாநாயகராகவும் இருந்த திரு. ஜெயக்குமார் மீது IPC 397 கொள்ளை பிரிவு பதிவு செய்யப்பட்டு இருப்பது மிக அநாகரிகமான செயல் எனவும் அவர்சார்பு வழக்கறிஞர் தம் வாதத்தை எடுத்துரைத்தார். இவ்வேளை திரு.ஜெயக்குமார் அவர்கள்இப்படிக்கூறினார் அதாவது 1991-ம் ஆண்டு முதல் பல்வேறு பதவிகளில் இருந்து வருகிறேன் என் மீது ஒரு வழக்கு கூட கிடையாது. இவ்வேளை என்னை அவமானப்படுத்தவே இது போன்ற வழக்குகள் என்மீது சுமத்தப்பட்டுள்ளன என நீதிமன்றத்தில் திரு.ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்தார்.