சர்வதேச பொருளாதார நிலை எதிர்காலத்தில் எவ்வாறானதாக காணப்படும் என்பது குறித்த மதிப்பீடுகள் பொருளாதார நிலை கணிசமான அளவிற்கு இருள்மயமாக காணப்படும் என தெரிவித்துள்ளார் சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியா.
ஆபத்துக்கள் உயர்நிலைக்கு சென்றுள்ளதால் அடுத்தவருடம் சர்வதேச பொருளாதார மந்தநிலைக்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என தெரிவித்துள்ளார். 2022 ஆண்டிற்கான சர்வதே பொருளாதார வளர்ச்சி குறித்த எதிர்வுகூறலை 3.6 வீதமாக சர்வதேச நாணயநிதியம் குறைக்கும் என ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ள அவர்சரியான எண்ணிக்கையை மதிப்பிடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2022 -2023ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி எவ்வாறானதாக காணப்படும் என்ற மதிப்பீட்டை ஜூலை மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் வெளியிடவுள்ளது. 2021இல் உலக பொருளாதாரம் 6.1 வீதம் விரிவடைந்தது என சர்வதேச நாணயநிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பரந்துபட்ட அளவில் பணவீக்கம் சீனாவின் பொருளாதாரவளர்ச்சி தேக்கம் ரஸ்ய உக்ரைன் யுத்தம் காரணமாக அதிகரிக்கும் என தடைகள் போன்றவற்றை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஏப்பிரல் மாதத்தில் எங்கள் மதிப்பீடுகளிற்கு பின்னர் எதிர்கால வளர்ச்சி குறித்த கண்ணோட்டம் இருள்மயமாகிவிட்டது நாங்கள் மிகவும் கொந்தளிப்பான நீரில் இருக்கின்றோம் என்றார்