அடுத்த மாதம் நான்காம் திகதி இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்

பாராளுமன்றம் அடுத்த மாதம் நான்காம் திகதி மீண்டும் கூடவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் தொடர்பான முன்னேற்றம் தொடர்பில் அன்றைய தினம் விவாதம் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற கட்சித்தலைவர்களின் கூட்டத்தின்போது இது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இதேவேளை, சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ள அரசியல் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைகள் தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love