மிகப்பெரிய உயரத்தில் இருக்கும் அணைகட்டு சுவரின் மீது சிறுவன் தனியாக நடக்கும் வீடியோ காண்போரை பதைபதைக்க வைக்கிறது.மிகச்சிறிய சுவரான அதில் கொஞ்சம் பிசகினாலும், சுமார் 100 அடிக்கு கீழாக இருக்கும் அணைக்குள் விழ நேரிடும். ஆனால் அதனை பொருட்படுத்தாத சிறுவன் அந்த சுவரில் தனியாக நடக்கிறான். இரண்டொரு இடங்களில் அந்த சிறுவன் கீழே விழுந்துவிடுமாறு செல்கிறான். பார்க்கும் அனைவருக்கும் அந்த நிமிடம் நெஞ்சை உலுக்கிவிடும்.
ஆனால் அவை அனைத்துமே VFX (Visual Effects) காட்சி விளைவுகள் என்பது கணினியைப் பயன்படுத்தி ஒரு காணொலியின் படங்களை மாற்றி அமைப்பதோ தேவைக்கேற்ப புதிய படங்களை உருவாக்கி அவற்றைக் காணொலியில் சேர்ப்பதோ ஆகும். இத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இக்காணொளி உருவாக்கப்பட்டுள்ளது