அதிகாரப் பசியே ராஜபக்சவின் வீழ்ச்சிக்கு காரணம்! -மக்கள் விடுதலை முன்னணி

எல்லையற்ற அதிகாரத்திற்கான பசியின் காரணமாக ராஜபக்ஷ இலங்கையில் செல்வாக்கற்றவராக மாறியதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.


ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்சியில் அனைத்து முக்கிய பதவிகளையும் வகித்து குடும்பத்தை மையமாக கொண்ட அரசாங்கத்தை உருவாக்க ராஜபக்சவின் மனப்போக்கு அவர்களின் இறுதி வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என கட்சியின் தலைவரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை புறக்கணித்து, ராஜபக்ஷ ஆட்சி எதேச்சதிகாரமாக நடந்துகொண்டதாக அவர் நினைவு கூர்ந்தார்.

அத்தகைய ஆட்சி இருந்தபோதிலும், கடந்த சில நாட்களாக மக்கள், உண்மையான அதிகாரம் எங்குள்ளது என்பதை அரசாங்கத்திற்கு காட்டுவதாக அவர் தெரிவித்தார். அடிமைகளைப் போல் நடத்தப்படுவதாலும், ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படுவதாலும் பொதுமக்கள் சோர்வடைந்துள்ளனர்.


அதிகாரத்தின் மீதான பிடி, பனி மலை போல் உருகியது, குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே இடம்பெயர்ந்தனர், மக்கள் பார்வையில் இருந்து விலகினர் எனவும் அவர் தேர்வித்தார்.

Spread the love