அதிக கட்டணம் வசூலித்த தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் பஸ்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த பஸ்கள் அடையாளம் காணப்பட்டதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணத்தை வசூலித்தமை, கட்டண விபரங்களை காட்சிப்படுத்தாமை, பயணச்சீட்டுக்களை வழங்காமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் இத்தகைய சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இணையாக வீதிப் பயணிப் போக்குவரத்து அதிகார சபையினால் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love