இன்றைய நவீன யுகத்தில் திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதுகின்றனர், அவ்விதமிருக்க கலைத்துறையில் மட்டுமல்ல ராணுவ சேவையிலும் தன்னை இணைத்து தமிழ் நடிகை ஒருவர் சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியிருக்கின்றார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஓர் திரைப்படம் ’காதம்பரி’. என்பதாகும். அது சமூக கருத்தை மையமாக வைத்து உருவான திகில் திரைப்படம், அப்படத்தில் தான் முதல்முதல் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். இவர் அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணாவார், கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
நடிப்போடு மட்டுமல்ல நடிப்புலகம் சார் அம்சமான பாடல் துறையிலும் அறிமுகமாகி பிரபல பாடகியாகவும் வலம் வந்தார், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், தனது வாழ்க்கைப்பயணத்தில் நாட்டுக்கு சேவை செய்ய ராணுவத்தில் இணைய வேண்டும் என்று ஆசைகொண்டு முடிவும் செய்தார்.
மிக மிக கடினமான பயிற்சிகளை தன்னுள்ளே கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது, ஆனாலும், தனது மகளின் விருப்பத்துக்கு பின் நிற்காத பெற்றோரின் மகளான அகிலாவிற்கு குடும்பத்தாரினது ஆதரவும் சம்மதமும் சாதகமாகக் கிடைக்க, கடுமையான பல மாத பயிற்சிகளின் வெற்றிகரமாக பட்டத்துடன் வெளியேறினார் அகிலா நாராயணன் என்னும் சாதனைப்பெண் , மேலும் ஒரு படி மேலேறி அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராகவும் இணைந்து சேவைபுரிந்துள்ளார்.
இந்த செயற்பாடு மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார், அமெரிக்க ராணுவத்தின் மிகக் கடினமான பல பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.
இதன்மூலம் இளைய சமூகத்தினருக்கு ஊக்கமும் சமூக அக்கறையும் தெரியும் வகையில் சமூகத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அகிலா நாராயணன், இன்னும் தன்னை உயரத்தில் வைக்க தான் கற்றதை பிறருக்கும் கற்பிக்கும் வகையில், ‘நைட்டிங்கிள் ஸ்கூல் ஆஃப் மியூசிக்’ என்ற இசைப் பள்ளிக்கூடத்தினை ஆன்லைன் மூலம் நடத்தி வருகிறார்.
அத்துடன் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், நான் வாழும் இந்த நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே தான் இராணுவ சேவையில் ஈடுபடத்தயாரானதாக கருத்துத்தெரிவித்தார். மேலும் தனது இத்தகைய சேவைக்கு பலரிடமிருந்து நன்மதிப்பும் ஊக்கம் கொடுக்கப்படுவதோடு திறந்த மனத்தோடு பலர் பாராட்டு தெரிவித்து வருவதாகவும, தன் குடும்பத்தாரும் மக்களால் வாழ்த்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் பரிமாறப்படுகின்றன.