ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பது தொடர்பான யோசனை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ரயில்வே துறையின் நஷ்டத்தை குறைத்தல் மற்றும் பயணிகளுக்கு செயற்றிறன் மிக்க சேவையை வழங்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, ரயில்வே திணைக்களத்தின் சில சேவைகளை தனியார் கூட்டு முயற்சியுடன் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் திணைக்களத்தின் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக M.M.P.K. மாயாதுன்னே கூறினார்.
ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைப்பதனூடாக, திறைசேரியிலிருந்து திணைக்களத்திற்காக வருடாந்தம் செலவிடப்படும் நிதியை சேமிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.