வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதத்தை குறைப்பது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ஒவ்வொரு அமைச்சிலிருந்தும் 5% ஒதுக்கீட்டில் குறைக்கப்படும் தீர்மானம் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அமைச்சுக்கள் பொதுக் கடனில் இயங்குவதால், இந்த 5% குறைப்பு, பொது நிறுவனங்களை நடத்துவதற்கு தேவையான கடன் தொகையை குறைக்கும் என்று நிதி அமைச்சு கூறுகிறது.