அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட கூட்டணி பிளவுறும் வாய்ப்பு உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கூட்டணியொன்றை முன்னெடுத்து. செல்வதா? இல்லையா? என்ற பொறுப்பு அதனை ஏற்படுத்தியவர்களின் கைகளிலேயே உள்ளது. அதனை அவர்கள் சரிவர நிறைவேற்றாத பட்சத்தில் கூட்டணி பிளவுபடுவதற்கான வாய்ப்புள்ளது. ‘ தகவல் அறியும் சட்டத்தை செயலிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சிக்கிறது. இவ்வாறு தகவல் அறியும் சட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவது கவலையளிக்கின்றது எனவும் தெரிவித்தார்.