சிரேஷ்டத்துவத்திற்கும் பதவி ஓய்விற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், 5 வருட காலத்திற்கு அரசாங்க ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வௌிநாடு சென்று வர சம்பளம் இல்லாத விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அவர்கள் வௌிநாடு சென்றதன் பின்னரான 2 மாதங்களுக்கு சலுகைக்காலம் வழங்கப்படவுள்ளது. 3 ஆவது மாதம் தொடக்கம் அவர்களது பெயர்களில் திறக்கப்பட்ட வௌிநாட்டு கணக்கிற்கு டொலர்களை அனுப்ப வேண்டும்.
ஒரு முதன்மை சேவை அதிகாரி மாதாந்தம் 100 டொலர்களை அனுப்ப வேண்டும் என்பதுடன், இரண்டாம் நிலை அதிகாரி 200 டொலர்களையும் மூன்றாம் நிலை அதிகாரி 300 டொலர்களையும் நிர்வாக அதிகாரி 500 டொலர்களையும் அனுப்ப வேண்டும்.
இன்று முதல் சம்பளமற்ற விடுமுறைக்கு அனுமதி வழங்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.