அவுஸ்ரேலியாவின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் கோலா கரடி இனம் அருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவீன்ஸ்லாந்து, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் அவுஸ்ரேலிய தலைநகர் பிரதேசங்களில் அதிக எண்ணிக்கையில் இந்த கோலா கரடி இருந்தன.
காட்டுதீ, வரட்சி, நோய், காலநிலை மாற்றம் மற்றும் காட்டு பிரதேசங்கள் அழிக்கப்படுவதன் காரணமாக பாரிய அளவில் அருகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலை தொடருமானால் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டளவில் இந்த இனம் முற்றாக அழிந்து விடும் என அவுஸ்ரேலிய சுற்றுச் சூழல் அமைச்சர் எச்சரித்துள்ளார்.