அவுஸ்திரேலிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் கொழும்பில்

2022 இந்தோ – பசிபிக் முயற்சி 2022 இல் ஈடுபட்டுள்ள அவுஸ்திரேலிய கடற்படையின் HMAS Adelaide மற்றும் HMAS Anzac ஆகிய இரண்டு கப்பல்கள் இன்று (25 அக்டோபர் 2022) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகை தந்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

இந்தோ-பசிபிக் முயற்சி ((IPE) 2017 இல் பிராந்திய பாதுகாப்புப் படைகளுடனான கூட்டுறவை வலுப்படுத்த அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்டது. திமோர், வியட்நாம், பிலிப்பைன்ஸ், லாவோஸ், கம்போடியா, தாய்லாந்து, புருனே, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் மற்றும் இந்தியா போன்ற 14 நாடுகளுடன் இந்த கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் கொழும்பு வந்துள்ள 230மீ நீளமுள்ள HMAS Adelaide கப்பலில் 18 ஹெலிகொப்டர்களும் 543 பணியாளர்களும் உள்ளனர். 118மீ நீளமுள்ள HMAS Anzac போர்க்கப்பலில் அவர் 119 பேர் உள்ளதுடன் தாக்கும் ஹெலிகாப்டரும் உள்ளது.

Spread the love