பாங்கொக் குவீன் சேர்க்கிட் ஞாபகார்த்த விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி தகுதிகாண் சுற்றில் இலங்கை 5ஆம் இடத்தைப் பெற்றது.
ஆசிய விளையாட்டு விழா ஆடவர் ஹொக்கி போட்டியில் விளையாட ஏற்கனவே தகுதிபெற்றிருந்த இலங்கை, நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உஸ்பெகிஸ்தானுடனான போட்டியில் 31 என்ற பெனல்டி முறையில் வெற்றிபெற்று இலங்கை 5 ஆம் இடத்தைப் பெற்றது. 5ஆம் இடத்தைத் தீர்மானிக்கும் போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 கோல்களைப் போட்டு ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால் வெற்றி அணியைத் தீரமானிக்க கள மத்தியஸ்தர்களினால் பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது. பெனல்டி முறையில் இலங்கை 3-1 என வெற்றி பெற்று 5 ஆம் இடத்தை உறுதிசெய்துகொண்டது.