ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்குமாறு கோரிய பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதவான் நீதிமன்றம்

வெகுஜன அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு தடைவிதிக்குமாறு உத்தரவிடக்கோரி பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் போது அமைதியை சீர்க்குலைக்கும் வகையில் செயற்பட்டாலோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையில் செயற்பட்டாலோ அது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அதிகாரம் காணப்படுவதாக கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க அறிவித்துள்ளார். கறுவாத்தோட்ட பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Spread the love